மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக சில காலங்களாக வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகிக்க கூடியவர்கள் இத்தகைய வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சொயினர் கருதுகின்றனர்.
இதனூடாக ராகுல் காந்தி குறித்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுவில் தலைவர் எச்.ராஜா, உத்தரப்பிரதேச மாநில அமைச்சா் ரகுராஜ் பிரதாப் சிங், மத்திய ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு, மகாராஷ்டிர மாநில சிவசேனை(ஏக்னாத் சிண்டே) எம்எல்ஏ சஞ்சய் கெய்ட்வாட், தில்லி முன்னாள் எம்எல்ஏ தா்விந்தா் சிங் மா்வா ஆகிய 5 போ் மீது வழக்கு பதிவு செய்ய கோரி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் புகார் அளித்துள்ளனர்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆய்வாளர் உயரதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மனு அளிக்க
மாவட்டத் துணை தலைவர் ரவிகுமார், நகர சிறுபான்மை துணை தலைவர் மாலிக், நகர செயலாளர் அலி அக்பர் கான், இப்ராஹிம், நகர இணை செயலாளர் முகம்மது தாஹா ஆகியோர் உடனிருந்தனர்.








