Sunday, February 1, 2026

அதிரையில் இடைவிடாத மழை : பள்ளி தலைமையாசிரியர்களால் அவதியுற்ற பெற்றோர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 23 அன்று உருவாக உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரையில் நேற்று நள்ளிரவு முதல் துவங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து கொண்டிருந்தது. மழை காலங்களில் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவுப்படி அந்தந்த பகுதிகளில் பெய்யும் மழைக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என உத்தரவு இருக்கும் நிலையில், அதிரையில் செயல்பட்டுவரும் பல்வேறு பள்ளிகள் விடுமுறை அளிக்கவில்லை. இதனால் மாணவர்களை உரிய நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவதிலும், ஆசிரியர்கள் தகுந்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதிலும் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது.

மழை காலங்களில் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு மழை நிலவரம் அறிந்து விடுமுறையளிக்க மாவட்ட நிர்வாகங்களில் உத்தரவு இருக்கும் நிலையில் அதிரை பள்ளி தலைமையாசிரியர்கள் இதுகுறித்து முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவது பெரும் அவதியை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் பலர் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img