MFC மதுக்கூர் அணியினரால் நடத்தப்பட்ட 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டியில் வெஸ்டர்ன் கால்பந்து அணி வெற்றி பெற்று முதல் பரிசு மற்றும் கோப்பையை தட்டிசென்றது.
இத்தொடர் போட்டியில் மொத்தம் 34 அணிகள் பங்கு பெற்றனர்.
பரப்பாக நடந்த இறுதி போட்டியில் WFC மற்றும் AFFA அணிகள் மோதினர், இதில் இரு அணியினரும் சமநிலையில் ஆடி முடித்தனர்.
இறுதியில் டை பிரேக்கர் முறையில் 2-1 என்ற கோல் கணக்கில் AFFA அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை வெஸ்டர்ன் FC அதிரை அணியினர் கைப்பற்றினர்.
இரண்டாம் பரிசு : AFFA அதிரை
மூன்றாம் பரிசு : YBR FA ஒரத்தநாடு
நான்காம் பரிசு : SP Memorial மதுக்கூர்
இத்தொடர் போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற விருதினை வென்றார் வெஸ்டர்ன் FC வீரர் முஹம்மது யஹ்யா












