மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். முகமது முஸ்தஃபா அவர்களின் மகளும், காதர் உசேன் அவர்களின் மனைவியும், முஹம்மது மைதீன், ஷேக் தாவூத், மர்ஹும். முகமது புகாரி ஆகியோரின் சகோதரியும், முகமது இக்பால் அவர்களின் பெரிய தாயாரும், அப்துல் அலிம் அவர்களின் பெரிய மாமியாருமாகிய ஓயா வீட்டு கம்சாம்மாள் அவர்கள் நேற்று 04/01/25 சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.







