Sunday, February 1, 2026

2 பின் ப்ளக் உயிருக்கே ஆபத்து, அப்போ 3 பின் ப்ளக். ?

spot_imgspot_imgspot_imgspot_img

பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ்களில் தொலைக்காட்சி அல்லது செல்போன் சார்ஜர் போன்ற தற்காலிக இணைப்பு பயன்பாடுகளுக்கு பிளக்குகள் இருக்கும்.

அவை பெரும்பாலும் 3 பின் பிளக்குகளாகத்தான் இருக்கும்.
எதற்காக 3 பின்? 3 Pin என்பது எர்த் இணைப்புடன் வருவது.

நாம் பயன்படுத்தும் கிரைண்டர் மிக்ஸி அல்லது மற்ற மின்சார பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டால் அது உடனே நாம் பயன்படுத்தும் பொருள் மீதுதான் பாயும். அதன் மேல் பக்கம் பிளாஸ்டிக் இல்லாமல் உலோகத்தால் உருவாக்கப்பட்டிருந்தால் அதன் மீது பாயும்.

அதன் மேல்பக்கம் எர்த் உடன் இணைக்கப்பட்டு இருந்தால் எர்த் இணைப்பு மூலம் மின்சாரம் பூமிக்குள் பாயும். இதன் லோடு தாங்காமல் MCB
உடன் டிரிப் ஆகி அல்லது பியூஸ் போய் நம்மை காப்பாற்றும்.

எர்த் இணைப்பு இல்லாமல் இருந்தால் மின்சாரம் உலோகபொருளின் மேல் பாய்ந்து கொண்டிருக்கும். நாம் அதைத் தொட்டவுடன் நமது உடலை மின்கடத்தியாக பயன்படுத்தி நம் உடல் மூலம் மின்சாரம் பூமிக்கு பாயும்.

ஒவ்வொருவரரின் உடல் வலிமையை பொருத்து குறிப்பிட்ட அளவு வோல்டேஜ்வரைதான் தாங்கும். அதற்கு மேல் மின்சாரம் பாய்ந்தால் உடல் தாங்காது நமது உடல் கருகிவிடும்.

எனவேதான் பாதுகாப்புக்காக 3 பின் பிளக்குகள் அமைத்து இருப்பார்கள். அதில் மேல் பக்கம் இருக்கும் பெரிய துளைதான் எர்த் இணைப்பு.
பிளக்கில் இருக்கும் மூன்று பின்களில் கீழ்பக்கம் இருக்கும் இரண்டு பின்களை (Connector) விட மேல்பக்க பின் கொஞ்சம் பெரிதாக, நீளமாகத்தான் இருக்கும்.

அதை பிளக்குக்குள் சொருகும் பொழுது முதலில் எர்த் இணைப்புதான் முதலில் மின்சாதனபொருளுக்கு கிடைக்கும். அதன் பின்புதான் மின்சார இணைப்பு கிடைக்கும்.

காரணம் மின்சாரம் பாயும் பொழுது அங்கு எர்த் இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும், மின்கசிவு இருந்தால் உடனடியாக ஃபியூஸ் போய்விட வேண்டும் என்பதற்காக உலகம் முழுதும் இப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை கடைப்பிடிக்கிறார்கள்.

எர்த் இணைப்பு தேவைப்படும் கருவிகளுக்கு 3 பின் பிளக் கொடுத்திருப்பார்கள்.

எர்த் தேவைப்படாத மின்சாதன பொருட்களுக்கு தயாரிப்பு நிறுவனங்களே 2 PIN இணைப்பு தருவாங்க. உதாரணம் சார்ஜர், இப்பொழுது வரும் நவீன தொலைக்காட்சிகள்.

எனவே எக்காரணம் கொண்டும் நாமாக 3 PIN பிளக்கை 2 PIN ஆக மாற்றக்கூடாது.

மேலும் நிறைய வீடுகளில் கூலி குறைவாக கேட்கிறார்கள் என்பதற்காக அனுபவமற்ற நபர்களைக் கொண்டு ஒயரிங் செய்திருப்பார்கள்.

அவர்கள் ஒவ்வொரு மின்னிணைப்புக்கும் எவ்வளவு மின்சுமை (லோடு) தேவைப்படும்? ஒவ்வொரு அறைக்கும் தேவைப்படும் இணைப்புகளுக்கு தனித்தனியாக எப்படி மின் இணைப்புகளை பிரித்து தருவது ?
அதற்கு எந்த வகையான சுவிட்சுகளை பொருத்த வேண்டும்? என்பதெல்லாம் தெரியாமல் கண்டபடிக்கு பொருத்தி வைத்திருப்பார்கள்.

இதன் மூலம் லோடு தாங்காமல் அடிக்கடி ட்ரிப்பாகிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒயர்கள் கருகி தீப்பிடித்து விடும்.

மேலும் அவர்கள் எர்த்தெல்லாம் தேவையில்லாத விஷயம் என்று கூறி அதை தவிர்த்து விடுவார்கள். அல்லது அதை முறையாக பூமிக்குள் பதிக்காமல் நேரடியாக மின் கம்பத்தில் இருந்து வரும் நியூட்ரலையே எர்த்தாக கொடுத்து விடுவார்கள். இது ஆபத்தாகிவிடும்.

எனவே வீடு, அலுவலகம், தொழிற்சாலை எதாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் முறையாக பூமிக்குள் பதிக்கப்பட்ட எர்த் இணைப்பு அவசியம் இருக்க வேண்டும்.

கூலி கொஞ்சம் அதிகமானாலும் முறையாக பயிற்சி பெற்ற நன்கு அனுபவம் உள்ள எலக்ட்ரீசியன்களை வைத்துதான் வேலை செய்ய வேண்டும்.

இது நமது உயிரையும், பொருளையும் காப்பாற்றும்.

மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்காமல் காப்பாற்றும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img