அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் இரண்டாவது சுற்று மற்றும் 15 வது போட்டியில் அதிரை AFFA – MFC மதுக்கூர் அணிகள் களம் கண்டன.
போட்டி துவங்கிய ஆரம்பத்திலிருந்தே இரு அணியினரும் புத்துணர்ச்சியுடன் தங்களது அணிக்காக முதல் கோலை அடிக்க வரிந்து கட்டி விளையாடினர். இரு அணியினருக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் சமமாக கிடைத்தாலும், தனக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்ட அதிரை AFFA அணி தனது முதல் கோலை பதிவு செய்து முதல் பகுதி நேர ஆட்டத்தில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பகுதி நேர ஆட்டம் முதலிலிருந்தே சுதாரித்துக் கொண்ட ஆடிய MFC மதுக்கூர் அணியின் கோலுக்கான முயற்சியின் திட்டங்களை அதிரை AFFA அணி வீரர்கள் முறியடித்து, அதை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டுமொரு கோலை அடித்து 2 – 0 என்கிற கோல் கணக்கில் அதிரை AFFA வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.