அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கால்பந்து தொடர் போட்டி முக்கிய சுற்றுகளை எட்டியுள்ள நிலையில், இத்தொடரின் 17 வது போட்டியில் அதிரை WFC – ARUL 7’S தஞ்சாவூர் அணிகள் மோதினர்.
இரு அணி விளையாட்டு வீரர்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் விதமாய் அதிரை வானிலையும் குளிர்ந்து போட்டியை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாய் போட்டி துவங்கியது.
முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் ஏதும் போட முடியாமல் சமநிலையில் முடிந்தது. பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், இரு அணிகளும் முதல் கோல் அடிக்க முனைப்பு காட்டி முன்னேறிய சமயத்தில் ARUL 7’S தஞ்சாவூர் அணிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.
இறுதியாக ARUL 7’Sதஞ்சாவூர் அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.