Sunday, February 1, 2026

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

spot_imgspot_imgspot_imgspot_img

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட் பந்து லீக் போட்டிகள் நடந்தன.

கடந்த ஏப்ரல் 11 முதல் மே 29 வரை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 15 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன.

இதில் இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினம் பகுதியைச் சார்ந்த வீரர்கள் அதிரை ARCC அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதனைத் தொடர்ந்து அந்த அணியின் யூசுஃப் சிறந்த ஆல் ரவுண்டர்கான பதக்கத்தையும், தவ்ஃபீக் சிறந்த பேட்ஸ்மேன் பதக்கத்தையும், ஜுபைர் இறுதிப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாஜித் அவர்களின் தலைமையில் அதிரை அணி கோப்பையை வென்று சொந்த ஊரான அதிராம்பட்டினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற அணியினரையும், சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை செய்த விளையாட்டு வீரர்களையும் செங்கடல் தமிழ்ச் சமூகம் பாராட்டியது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img