அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அதிரை AFFA – சென்னை தமிழ்நடு காவல்துறை அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பான இந்த அரையிறுதி போட்டியில் வென்று பைனலுக்குள் சென்று விட வேண்டும் என்கிற முக்கியத்துவத்தை உணர்ந்து இரு அணியினரும் தங்கள் அணியின் கோல் முன்னிலைக்காக கடுமையான முறையில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் போராடினர். இந்த போராட்டத்திற்கான பலனாக சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றனர்.

இதனால் AFWA மைதானம் முழுவதும் ஒருவிதமான அமைதியே நிலவியது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், சென்னை தமிழ்நாடு காவல்துறை அணி, அதிரை AFFA அணியை கோல் ஏதும் போடாதவிதமாக Defense ஆட்டத்தையே கையாண்டது. இதனால் அவ்வப்போது AFFA அணி வீரர்கள் ஆங்காங்கே சில தடுமாற்றங்களை சந்தித்தனர்.
ஒரு கோல் முன்னிலையில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணி இருந்ததால், AFWA அரங்கமே Pin Drop Silence எனும் அமைதிக்குள் சென்றது.
ஒரு கோல் பின்தங்கியிருக்கும் தனது அணியை மீட்டெடுக்கும் பொறுப்பை உணர்ந்து தனக்கு கிடைத்த அருமையான Pass மூலம் AFFA அணி கேப்டன் அபூபக்கர் கோல் அடித்ததும் அமைதியில் இருந்த AFWA அரங்கமே விண்னை முட்டும் அளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தத்தில் திளைத்தது.
இந்த ஒரு கோல் மூலம் போட்டி சமநிலைக்கு வந்ததால் இது AFFA அணி வீரர்களுக்கு புதுவித தெம்பையும் அடுத்தடுத்த கோலுக்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட வைத்தாலும் கோலுக்கான KICK அனைத்தும் Very Close ல் நழுவி சென்றது.
இறுதியாக 1 – 1 என கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்ததால் ‘டை – பிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது.
முதலில் இரு அணியினரும் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் சரி சமமாகவே கோல்களை அடித்துக் கொண்டிருந்ததால் மீண்டுக் டை பிரேக்கர் தொடர்ந்தது.
தொடர்ந்து சமநிலையில் போட்டி சென்று கொண்டிருந்த சமயத்தில் One to One Goal Keeper எனும் அடிப்படையில் AFFA கோல் கீப்பர் அடித்த Shootout, கோல் கம்பம் நோக்கி நழுவி சென்றது. இதனால் 6 – 5 என்கிற கோல் கணக்கில் தமிழ்நாடு காவல்துறை (சென்னை) அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
கடந்த சில மாதங்களாகவே உள்ளூர் மற்றும் வெளியூர் கால்பந்து தொடர்களின் அரையிறுதி போட்டிகளில் தொடர்ச்சியாக அதிரை AFFA அணி தோல்வியை தழுவி வருவது அதிரை ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.