அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால் நகர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிரையை சார்ந்த பல அணிகள் விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடரின் முடிவில், முதல் பரிசை பிலால் நகர் BBFC ஜூனியர் அணியினரும்,
இரண்டாம் பரிசை வெஸ்டர்ன் FC ஜூனியர் அணியினரும்,
மூன்றாம் பரிசை ROYAL FC ஜூனியர் அணியினரும் தட்டிச் சென்றனர். மேலும் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.







