அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடரின் இறுதி ஆட்டம் நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இந்த இறுதி ஆட்டத்தில் ABCC அதிரை அணியினரும் RMCC அதிரை அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய ABCC அதிரை அணி, சொந்த மைதானத்தில் வெற்றி வாகை சூடி முதல் பரிசை தட்டிச் சென்றது.
முதல் பரிசு – ABCC அதிரை (ரூ. 30,000 + சுழற்கோப்பை)
இரண்டாம் பரிசு – RMCC அதிரை (ரூ. 25,000 + சுழற்கோப்பை)
மூன்றாம் பரிசு – குருவிக்கரம்பை (ரூ. 15,000 + சுழற்கோப்பை)
நான்காம் பரிசு – Young Tiger Pattukottai(ரூ. 10,000)
ஐந்தாம் பரிசு – MSK மல்லிப்பட்டினம் (ரூ. 10,000)
மேலும் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருது – அஜீஸ்(Pattukottai), சிறந்த பவுலர் – ஜக்கரியா(ABCC), சிறந்த பீல்டர் – குகன்(குருவிக்கரம்பை), தொடர் நாயகன் – தீனா(RMCC), இறுதி போட்டியின் ஆட்ட நாயகன் விருது – அப்பாஸ்(ABCC) ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை, சுழற்கோப்பை, பதக்கங்கள், சிறப்பு பரிசுகளை கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாக தலைவர் P.G.T. முஹம்மது இஸ்மாயீல், பொருளாளர் M. நஸ்ருதீன் சாலிஹ், 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் P.G.T. செய்யது முஹம்மது, துபாய் AECC அணியின் தலைவர் S. ரியாஸ் அஹமது, விளையாட்டு ஆர்வலர் வஜீர் அலி ஆகியோர் வழங்கினர்.
இத்தொடர் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிய ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அணிகள், பரிசளிப்பு விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கிய கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், பரிசுகளுக்கு ஸ்பான்சர் செய்த ஸ்பான்சர்கள் மற்றும் ABCC அணியின் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ABCC அதிரை அணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

































