அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H. அஸ்லம் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை MLA வரவேற்புரை ஆற்றினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் MLA, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி MP, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் MLA, திமுக வர்த்தக அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் ஏனாதி. பாலசுப்ரமணியன், தொகுதி பார்வையாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே. என். நேரு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளருமான வழ. அலிம் அல் புஹாரி, தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளும் கே பீகார் மண்ணில் தமிழ்நாடு முதல்வருக்கு கிடைத்த எழுச்சிமிகு வரவேற்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இறுதியாக அதிரை திமுக மேற்கு நகர செயலாளர் S.H. அஸ்லம் நன்றியுரை ஆற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவினர், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.















