அதிராம்பட்டினத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்தி வருகிறது,இதனால் தொற்று நோய்களால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சிறிய புகைவகையிலான புகை அடிக்கும் இயந்திரம் கொண்டு ஊருக்குள் கொசு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறது.
“இது ரோட்டில் இருக்கும் கொசுக்களை வீட்டிற்குள் அனுப்பும் செயல்”
தேங்கி நிற்கும் நீர்களில் இருந்து உற்பத்தியாகும் லார்வா புழுக்களை ஒழிக்காமல் கொசுக்களை ஒழிப்பது என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று அய்வா ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் லார்வா புழு ஒழிப்பில் அக்கரை செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.









