தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் – செங்கோட்டை மற்றும் தாம்பரம் – ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்த இரண்டு ரயில் நிலையங்களும் ஆயிரக்கணக்கான பயணிகள் அன்றாடம் பயன்படுத்தி வரும் முக்கிய நிலையங்களாகும். தென்மாவட்டங்களுக்குச் செல்லும் இந்தப் பிரபலமான விரைவு ரயில்கள் இங்கு நின்று சென்றால், மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும், இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை இது என்றும் எம்.பி. ச.முரசொலி அவர்கள் ரயில்வே அமைச்சரிடம் விளக்கினார்.
பொதுமக்களின் நலன் கருதி, தாம்பரம் – செங்கோட்டை மற்றும் தாம்பரம் – ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும் அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள், எம்.பி.யின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தாக கூறப்படுகிறது.








