அதிராம்பட்டினம் அபுல்கலாம் ஆசாத் கோச்சிங்: TNPSC வெற்றியாளர்களுக்கு விருது விழாஅதிராம்பட்டினம், டிச.14: மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் சார்பில் TNPSC தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பணியில் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நேற்று (13.12.2025) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சி.எம்.பி. லைனில் உள்ள ஏ.எல். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை வட்டாட்சியர் முனைவர் கா.தர்மேந்திரன், துணை ஆட்சியர் கமலேஷ், நகராட்சி ஆணையர் சி.சுகேந்திரன், சமூக நலத்துறை அஞ்சலர் எஸ்.முஹைதீன் அசாருதீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அகாடமியில் பயின்று அரசுப் பணி பெற்றவர்களான எஸ்.அமீர் சாஹில் (டைபிஸ்ட்), ஏ.சிராஜுதீன் (ஜூனியர் அசிஸ்டண்ட், வக்ஃப் போர்டு), ஏ.நூருநாஸியுல்லா (ஜூனியர் அசிஸ்டண்ட், பள்ளிக்கல்வி), இசட்.சையது அபுதாஹிர் (டைபிஸ்ட்), ஐ.முகமது ரியாஸ் (கிராமநலத் துறை) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வருங்காலத்தில் அரசுப் பணியை நோக்கி பயிற்சி பெற விரும்புவோர் 90922 82686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.








