பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது
பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் TRB ராஜா அடிக்கல் நட்டார்.
மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், திமுக மாவட்ட செயலாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர செயலாளர் SH.அஸ்லம், சுற்றுவட்டார கிராம கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக நகர, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.










