அதிராம்பட்டினம், டிசம்பர் 27: அதிரை பண்பலை 90.4 FM-ன் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, இமாம் ஷாஃபி பள்ளிக்கூட வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.பண்பலையின் நிர்வாக இயக்குநர் ஹாஜி MS. தாஜூதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “வாசிப்பு திறனும் கேட்கும் திறனும் மேலோங்கினால் சமூக தீமைகள் விலகும். இதன் காரணமாகவே அதிராம்பட்டினத்தில் ஒரு பள்ளிக்கூட நிர்வாகமே இந்த சமூக பண்பலையை நடத்தி வருகிறது” என்றார்.
மேலும், இந்த பண்பலை மூலம் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் அனைத்து திட்டங்கள், வானிலை நிலவரம், விவசாயம் உள்ளிட்ட தகவல்கள் 15 கி.மீ. வரையிலான பரப்பளவில் ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பண்பலை நேயர்கள் ஆண்கள் பெண்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு, தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினர்.












