பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் சா. முரசொலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பாரம்பரியத்தை போற்றும் வகையில் மண்பானையில் பொங்கலிட்டு, கும்மிப்பாட்டுடன் “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டபடி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த நிகழ்வில் அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர செயலாளர் அஸ்லம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மக்கள் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த பொங்கல் விழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.








