Saturday, February 14, 2026

திராவிடமும் இஸ்லாமும் வாழ்வியலில் ஒத்துப் போகக்கூடியது  – DIK அபுகிதர் பேச்சு!

spot_imgspot_imgspot_imgspot_img

திராவிட இஸ்லாமியக்கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் அபுகிதர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் சமீபகால நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கூட்டத்தில் பேசிய அபுகிதர், “திராவிடமும் தமிழர்களும் ஒன்றோடு ஒன்று இணைந்த சமூகமாகும். வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோமே தவிர, நாம் அரபு நாட்டின் இறக்குமதிகள் அல்ல” என்று தெரிவித்தார். மேலும், “வரவிருக்கும் தேர்தலில் அடிமட்ட தொண்டர்களின் ஆழ்மனதின் வெளிப்பாடாக இருந்து செயல்படுவோம். எங்களுக்கு பதவி, பந்தா, பகட்டு தேவையில்லை. தமிழர் சமூகம் விழிப்புணர்ச்சியுடன் முன்னேறி வருகிறது” எனக் கூறினார்.


இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அசாருதீன், மாநில பொருளாளர் அதிரை நிஜார் அகமது, துணைத்தலைவர் முகம்மது இலியாஸ், துணைப் பொதுச்செயலாளர் ரஃபீக் அகமது, மோத்திபாவா, இம்தியாஸ், யூசுப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில்  தொடங்கிய “நிழல்” யுத்தம். – நிஜம் யாருக்கு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தஞ்சை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பட்டுக்கோட்டையில் திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே 'சீட்'...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img