அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த DTCP (நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறை) மற்றும் நகராட்சி தகவல் அலுவலர் வழங்கிய தகவலில், கட்டிடத்திற்கு உரிய திட்ட அனுமதி வழங்கப்பட்டதாக பதிவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட முக்கிய நிர்வாகக் கட்டிடத்திற்கே தேவையான சட்டப்பூர்வ அனுமதி இல்லையெனில், அது எவ்வாறு கட்டப்பட்டது?மக்களின் 5கோடி வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, இந்த விரயத்திற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சாமானிய மக்கள் கட்டும் கட்டிடத்திற்கு அப்ரூவல் வழங்க இழுத்தடிக்கும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி கட்டிடத்திற்கு எவ்வத ஒப்புதலும் இல்லாமல் அனுமதி வழங்கியது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.








