Wednesday, April 1, 2026

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.

சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியை மீட்டெடுக்க அதிமுகவும் தீவிர வியூகம் வகுத்துள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினம் பகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மையப்படுத்தி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளது.

அதிமுக தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் நகராட்சி நிர்வாக முறைகேடுகள், துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தில் ₹1.30 கோடி அளவிலான ஊழல், அர்டா நில விவகாரம், இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான இடையூறுகள், வரி வசூலில் குளறுபடிகள், உரிய அனுமதியின்றி நகராட்சி அலுவலக கட்டிடம், வடிகால் வசதி இல்லாமை, சாலை பணிகளில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

இதனுடன் சேர்த்து சுகாதார துறையிலும் கடுமையான குறைகள் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. சுத்திகரிக்காத குடிநீர் விநியோகம் காரணமாக மக்கள் சிறுநீரக மற்றும் குடல்நோயால் அவதிப்படுவது, அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமை, மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை, குப்பை மேலாண்மை சீரற்ற நிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளாக முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், மாநில அளவிலும் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் அரசியல் சூழலை பாதித்து வருகின்றன. குறிப்பாக கோவை சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சம்பந்தப்பட்ட கைதிகள் “முன்னைய மனநிலையிலேயே உள்ளனர்” என்றும், அவர்கள் வெளியே வந்தால் ஹிந்து தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது அரசியல் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

உள்ளூர் மற்றும் மாநில அளவிலான இத்தகைய பிரச்சனைகளை ஒருங்கிணைத்து “அடிப்படை வசதிகளில் தோல்வி, நிர்வாகத்தில் ஊழல், பாதுகாப்பில் சவால்” என்ற கோணத்தில் அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்வை நேரடியாக பாதிக்கும் அம்சங்களை முன்வைத்து, வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து –...

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க...

அதிரையிலிருந்து சட்டமன்றத்தை நோக்கி: ஜியாவுதீனின் புதிய அரசியல் பயணம்!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக போராட்டங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஜியாவுதீன், சுயேட்சை...

அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!

பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக...
spot_imgspot_imgspot_imgspot_img