அதிராம்பட்டினம் ஏப் 11
தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரையை சிறப்பாக முன்னெடுத்து வருவதற்காக மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு ஜெ. சரீப் பாராட்டு தெரிவித்தார். தேர்தல் பணிகளில் கட்சி மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ள ஆதரவு குறித்து இந்நேரத்தில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த சந்திப்பில் தஞ்சாவூர் மாநகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.








