பட்டுக்கோட்டை தொகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் CV சேகர் தனது கருத்தை வெளியிட்டு, “மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தொகுதி முழுவதும் மக்கள் தங்களை ஆதரித்து வருவதாகவும், நடைபெற்று வரும் பிரசாரங்களுக்கு மக்களிடமிருந்து நல்ல எதிரொலி கிடைத்துவருவதாகவும் தெரிவித்தார். அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை வசதி போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் தாம் செயல்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சிறுபான்மையினர் நலன், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றம் போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு பிரச்சாரம் செய்து வருவதாகவும், குறிப்பாக கோவை சிறைவாசிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பட்டுக்கோட்டை பகுதியில் வாக்காளர்களின் மனநிலை மாற்றம் அரசியல் கட்சிகளிடையே போட்டியை அதிகரித்துள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.








