Sunday, September 14, 2025

​ஊடக தர்மம் எவ்வாரிருக்கவேண்டும்- இஸ்லாம் கூறும் அறம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தற்கால ஊடகங்கள் எவ்வாறான பக்க சார்பு உடையதாக உள்ளன என்பதற்கு, சான்றாக இருப்பதை உள்ளூர் முதல் உலகளாவிய ஊடகங்களின் நிலை கவலையளிக்க கூடியதாக உள்ளன.

இப்போக்கை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

அரசுக்கு விசுவாசமாக நடப்பதற்க்காகவும் நண்பர்கள், உறவினர்களின் விருப்பு வெறுப்புக்களை பேணுவதற்காகவும், சுய லாபங்களை ஈட்டி கொள்வதற்காகவும் உண்மைகள் திரிக்கப்படுவதுண்டு. ஆனால் அல்லாஹ் குர்ஆனில் உங்களுக்கு ஒரு சமூதாயத்தினர் மீது இருக்கும் பகைமையானது நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வதற்கு ஒரு போதும் தடையாக இருக்க கூடாது என வல்ல இறைவன் நமக்கு அறிவுரை கூறுகிறான்.

ஆனால் இன்றைய ஊடகவியலாளர்கள் தனது புகழ்ச்சி மேலோங்க வேண்டும் என்பதற்காக செய்திகளில் இசைவு, அதிகார வர்க்கத்தின் வரவு, தன்னை முன்னிலை படுத்த எடுக்கும் சிரத்தை இவையாவும் ஊடக அறத்தை கெடுப்பதாகவே உள்ளன. 

தற்கால சூழ்நிலையில் ஆளும் வர்கம், காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் இஸ்லாமியர்களின் ஊடக திறமையை சிதறடிக்கும் பணிகளை செவ்வனே செய்து வருகிறது.

குறிப்பாக சமூக ஊடகங்கள், வலைப்பூ வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பரிமாற்றாங்களை கண்காணித்து சிறப்பாக செயல்படும் ஊடகங்கள்/ விவாதகளங்களில் ஈடுபடுவோரை தன் வசப்படும் வகையிலான சூழ்ச்சியினை செய்து வருகின்றன. அது போன்ற அற்ப சொற்ப லாபங்களுக்காக தன் பொறுப்பை மறந்து செயல்பட கூடாது என இஸ்லாம் கூறுகிறது.

எனவே ஊடகவியலாளன் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். மனித சமுதாயத்திற்கு அவன் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி தன் மீதான அமானிதத்தை பாதுக்காக்க வேண்டும். என இஸ்லாம் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல்...
spot_imgspot_imgspot_imgspot_img