Monday, December 1, 2025

சென்னையில் ஐபிஎல் போட்டியை ரசிகர்களுக்கு கிடுக்குபிடி!

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 7-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது.

4-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 அணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அமைப்புகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.

இதற்கிடையில் வேல்முருகன், சீமான் போன்றோர் மைதானத்தை முற்றுகையிடுவோம் எனக் கூறினார்கள். இதனால் ஐபிஎல் போட்டி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா போட்டியை மாற்ற இயலாது என்றார். இதனால் நாளை திட்டமிட்டபடி போட்டி நடக்க இருக்கிறது.

போட்டி நடைபெற இருப்பதால், வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும், மைதானத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை போட்டியை காணச்செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், பேனர்கள், பதாகைகள், கேமரா, செல்போன் எடுத்த வரக்கூடாது. இனவெறி தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பக்கூடாது. தேசிய கொடியை அவமத்தித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மைதானங்களை சேதப்படுத்தினால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 50-ற்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img