நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தலத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியேற்றினார்.
முன்னதாக திறந்தவெளி ஜீப்பில் பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
மேலும் வீரதீர செயல் செய்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் , உள்ளாட்சி நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகள் ஆகியவற்றிக்கும் விருது வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
கோட்டையில் நடைபெற்ற இந்த சுதந்திர தினவிழாவில் தமிழக அமைச்சர்கள் , காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.











