Monday, December 1, 2025

இளம் சிறுமிக்கு மறுவாழ்வு கிடைக்க உதவிடுங்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

கோயம்புத்தூரைச் சேர்ந்த குதுபுதீன் மற்றும் காதர் ஜஹான் தம்பதியின் மகள் நப்ஸீன் பாத்திமா. இவருக்கு 13 வயதாகிறது. இந்நிலையில் இவருக்கு இருதயத்தில் ஏற்பட்ட நீர் கோர்வையால் மூன்று முறை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிறுமி ஒரு சில மாதங்கள் உடல்நலம் பெற்று இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பயந்துபோன அச்சிருமியின் பெற்றோர் மருத்துவரிடம் ஆலோசிக்கையில், அந்த சிறுமிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அப்படி இல்லையெனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய தற்போது அவர்களுக்கு ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய இந்த தம்பதியினர், தங்கள் மகளின் சிகிச்சைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எது எதிலோ செலவு செய்யும் நாம் அந்த இளம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவலாம். நாம் செய்கின்ற இந்த நிதியுதவி ஒரு இளம் சிறுமியின் மறுவாழ்வுக்கு காரணமாக இருக்கும். எனவே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அச்சிறுமியின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வங்கிக் கணக்கு விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பெயர் : காதர் ஜஹான் பீவி
தொலைபேசி எண் :
+91 7092176376
+91 9600707693
கணக்கு எண் :5482101005067/கனரா வங்கி

IFSC CODE:CNRB0005482

Branch: வடமதுரை

குறிப்பு : மேலே உள்ள தகவல் அனைத்தும் அதிரை எக்ஸ்பிரஸால் உறுதி செய்யப்பட்டவை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img