Monday, February 2, 2026

திருச்சியை குலுக்கிய தப்லீக் இஜ்திமா… பல லட்சம் பேர் பங்கேற்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி இனாம்குளத்தூரில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இஜ்திமாவில் பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தை கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்தினர்.

இஜ்திமாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. அவசர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல் ஐவேளைத் தொழுகையும் மாநாட்டு திடலிலேயே தொழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக இஜ்திமா ஏற்பாட்டாளர்கள் மூலம் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இஜ்திமாவை முன்னிட்டு மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img