SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் நகர நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று சனிக்கிழமை(02.03.2019) சேதுபாவசத்திரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டமானது SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்லா மற்றும் மாவட்ட செயலாளர் அவுரங்கசீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நகர தலைவராக கலீல், செயலாளராக சேக் முகமது, பொருளாளராக அபுதாஹிர், துணைத் தலைவராக பக்கீர் முகமது, துணைச் செயலாளராக ஜலால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.













