Sunday, March 22, 2026

விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு குறித்து வாய் திறக்காத பாஜக… தேர்தலில் எதிரொலிக்குமா ?

spot_imgspot_imgspot_imgspot_img

தேர்தல் என்று வந்தாலே அதில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். இதில் எந்த கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பொறுத்தும் மக்கள் வாக்களிப்பதுண்டு.

அந்த வகையில் முதல் முதலாக கோரிக்கை என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாமகதான். அக்கட்சியின் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தது. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாய கடன் தள்ளுபடி, மதுவிலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் முன் வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அது போல் காங்கிரஸ் கட்சியும் நீட் தேர்வு விவகாரத்தில் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தன.

இன்று பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம்தான் அளித்தது. விவசாயிகள் தங்கள் கடனை தள்ளுபடி செய்யக் கோரி அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் பட்டை நாமத்தை போட்டுவிட்டது. அது போல் இந்த இரு கோரிக்கைகளை முன்வைத்த கட்சிகளான அதிமுகவும், பாமகவும் பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

அப்படியிருக்கையில் அந்த இரு கட்சிகளின் கோரிக்கைகளையும் பாஜக காற்றில் பறக்கவிட்டு விட்டது. இதில் எங்கிருந்து மாநில உரிமைகளை இவை இரு கட்சிகளும் பாஜகவிடம் இருந்து பெறுவது? பாஜகவுடன் கூட்டணியால் தமிழகத்துக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

திமுகவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இருந்தது. ஆனால் பாஜகவோ கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமகவின் கோரிக்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

நீட் தேர்வை தமிழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பாஜக எவ்வித அறிவிப்பையும் வெளியிடாதது நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img