Saturday, March 21, 2026

அதிரை AFFA தொடர் : பொதக்குடியை வீழ்த்திய ஆலத்தூர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி நேற்று முன்தினம் மாலை கிராணி மைதானத்தில் தொடங்கியது.

அதில் இன்று மாலை நடைபெற வேண்டிய பொதக்குடி – ஆலத்தூர் அணிகள் இடையேயான போட்டி, இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆடி முடித்தனர்.

பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் ஆலத்தூர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ரியாளத் FC பொதக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

குறிப்பு : இன்று மாலை விளையாட இருந்த ஆலத்தூர் அணி தஞ்சையிலும், அதிரை AFFA அணி ஆலத்தூரில் காலிறுதி போட்டியில் விளையாட உள்ளதாலும் இன்று மாலை நடைபெற இருந்த ஆட்டம், காலை நடைபெற்றது. இதனால் இன்று மாலை போட்டிகள் கிடையாது என்றும், நாளை முதல் வழக்கம்போல் தினமும் 2 போட்டிகள் நடைபெறும் என்றும் AFFA அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img