தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் சிரித்துள்ளார். பிறகு இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அடுத்து, அமைச்சர் ஒருவர், ஸ்டாலினை அணைத்தப்படி கைகுலுக்கியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்பொழுது தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சிறப்பாக இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஸ்டாலினை அணைத்த அமைச்சர்… கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம் ! தலைத்தோங்கும் அரசியல் நாகரிகம்..!!(படங்கள் இணைப்பு)
More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z








