Sunday, February 1, 2026

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளக்காடான தமிழக மாவட்டங்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதேபோல் நேற்று தமிழகம் முழுக்க நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், சேலம், குமரி, கொடைக்கானல், கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சை, நீலகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. நீலகிரியில்தான் நேற்று இரவு அதிகமாக மழை பெய்தது.

இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது கோவையில் சாரல் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மற்றும் நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியுள்ளது. கொடைக்கானலில் பெய்து வரும் மழை காரணமாக, மலை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஊட்டியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குமரி, ராமேஸ்வரம், கடலூர் ஆகிய பகுதிகளில் 60 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img