Tuesday, March 31, 2026

‘இந்த வருடமும் பொங்கலுக்கு 1000 ரூபாய்’ – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் புதியதாக மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கள்ளக்குறிச்சி புதியாக மாவட்டமாக செயல்பாட்டுக்கு வர ஆயத்தமாகி அதற்கான தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையில் உரையாற்றும்போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதையும் பார்க்கவும் மாட்டார் படிக்கவும் மாட்டார் போகிற போக்கில் குற்றச்சாட்டு சொல்லிவிட்டு போய்விடுவார். சேலம் கள்ளக்குறிச்சி எல்லையில் கால்நடை பூங்கா அமையவுள்ளது. திண்டிவனத்தில் உணவு பூங்கா அமையவுள்ளது. தொடர்ந்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திவருகிறது அதிமுக அரசு.

போன வருடம் புயல் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் நல்ல மழைபொழிந்து செழிப்பாக உள்ளது தமிழகம். எனவே பொங்கலுக்கு ஏதெனும் பரிசு அறிவிப்பு இல்லையா என செல்லும் இடங்களில் மக்கள் கேட்கிறார்கள்.

இந்த மேடையில் சொல்லுகிறேன், போன வருடம் போன்றே இந்த வருடமும் பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, முந்திரி, திராட்சை,கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்புடன் அரிசி ரேஷன் அட்டைக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ஏப்ரல் 3-ம் தேதி காவல் நிலையம் முற்றுகை: ஐக்கிய முஸ்லிம்...

அதிராம்பட்டினம்: ​அதிராம்பட்டினத்தில் நிலவி வரும் சமூக விரோதச் செயல்கள் மற்றும் காவல்துறை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img