Sunday, February 1, 2026

அதிரை : தன்னார்வ பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொது தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் என பலருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அதிரை காவல்நிலைய துணை ஆய்வாளர் ராஜூ, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், சித்த வைத்தியர் அமீர் சுல்தான், பட்டிமன்ற பேச்சாளர் அன்னா சிங்காரவேலு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் மன்சூர் உள்ளிட்ட ரெட்கிராஸ் ஆயுட்கால உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக IRCS சேர்மன் மரைக்கா கே. இதீரிஸ் அஹமது அனைவரையும் வரவேற்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img