Saturday, September 13, 2025

தாய், தந்தையை இழந்து தவித்த பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி செய்த டிஎஸ்பி சபியுல்லா !

spot_imgspot_imgspot_imgspot_img

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி நிற்கதியாய் நிற்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
நீளுமா உதவிக்கரம் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இதனையடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஐபிஎஸ்-ன் உத்தரவின்பேரில் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, அந்த பெண் பிள்ளைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் மாஸ்க் சானிடைசர் ஆகியவற்றோடு வீட்டு செலவிற்காக ரூபாய் ஐந்தாயிரம் ஆகியவற்றை வழங்கி பிள்ளைகளின் கல்விச் செலவிற்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் கூறி ஆறுதல் கூறியுள்ளார்.

ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறியுள்ளார். வேதாரண்யம் பகுதியில் இவ்வாறு பல்வேறு உதவிகளை டிஎஸ்பி சபியுல்லா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img