13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29-ந் தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளி போடப்பட்டால், வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த போட்டியை வெளிநாட்டில் நடத்தலாமா? என்பது குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் ஐ.பி.எல். போட்டியை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை அணுகி இருந்தது. இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
More like this
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில்...
அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...
அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...