Sunday, February 1, 2026

கொரோனா: டெல்லியில் மீண்டும் ஊரடங்கு?

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்லியில் மீண்டும் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து கட்டுப்படுத்த அரசு திணறி வந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை சீரான நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு மினி ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. 

இதனால் மக்கள் கலக்கம் அடைந்தனர். ஆனால் ஊரடறங்கு எதுவும் பிறப்பிக்கப்போவதில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கிறது என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img