Sunday, February 1, 2026

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 86 வது மாதாந்திர கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 86-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்ச்சி நிரல்:- 

கிராஅத்                 : சகோ. முகமது ஷாஃபி ( உறுப்பினர் )

முன்னிலை           : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

வரவேற்புரை            : சகோ. நெய்னா  முகமது (ஒருங்கிணைப்பாளர் )

சிறப்புரை              :  சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )

அறிக்கை வாசித்தல்  :  சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

நன்றியுரை            : சகோ. A. சாதிக் அகமது  ( இணைத்தலைவர் )

தீர்மானங்கள்:

 1) இன்ஷா அல்லாஹ் கடந்த இரண்டு வரிடங்களாக தொடர்ச்சியாக நமதூர் ஏழைகளுக்கு ரமலான் ஆரம்பத்தில் உதவிவரும் ரமலான் கிட் விசயமாக தெளிவுபடுத்தப்பட்டு, அதற்கான நிதியுதவியினை அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒரு கிட்டின் மதிப்பு Rs.1200/- ( ரியால் மதிப்பு SR.65 )

2) இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாதத்தின் அமல்களில் ஒன்றான ஜக்காத், ஃபித்ரா, சதக்கா இவைகளை பைத்துல்மால் அளித்திடுமாறு தலைமையகத்திலிருந்து மூலம் வந்த கடிதத்தை வாசிக்கப்பட்டு, அதன் சிறப்புகள் பற்றி விரிவாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிரை பைத்துல்மாலின் மூலம் தொடர்ச்சியாக 22-க்கும் மேலாக பல சேவைகளை திறம்பட செம்மையாக செயல்படுவதற்கான நிதி ஆதாரமான ஜக்காத், ஃபித்ரா, சதக்கா நமதூர் மக்கள் வெளியூர் நபர்களிடமும் வெளிநாட்டவர்களிடமும் அதனை பெற்று  பொருளாதார உதவியினை பைத்துல்மாலுக்கு அனுப்பி தருவது என தீர்மானிக்கப்பட்டது.

3) ரியாத் கிளையின் இஃப்த்தார் நிகழ்வு ( மெகாக்கூட்டம் ) காலத்தின் தேவைகளுக்கு  ஏற்ப நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நோன்பு ஆரம்பத்தில் அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் இவ்வரிடம் நோன்பின் ஃபித்ரா அரிசி ஒருநபருக்கு 15 ரியல் என்று தீர்மானிக்கப்பட்டு, அதனை நோன்பின் முதல் வாரத்தில் ஜக்காத் தொகையுடன் சேர்த்து வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ABM தலைமையகத்தின் பிப்ரவரி மாதக்கூட்டத்தில் பென்ஷன்+தையல்மிஷின் வழங்கிய ரியாத் நண்பர்களை பாராட்டியும், அவர்களுக்காக துஆ செய்வதாக அறிவிப்பு செய்தது மேலும் எங்களை ஊக்குவிப்பதுடன் தொடர்ச்சியாக சேவையையும், பொருளாதார உதவியையும் தூண்டுதலாக அமைந்தது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 87-வது அமர்வு முழுவிபரம் பின்னர் அறிவிக்கப்படும் 

.           

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img