கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதத்திற்கான மின் அளவீடு எடுக்க வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிரையிலும் வீடுகள் தோறும் மின்வாரிய ஊழியர்கள் அளவீடு எடுக்கவில்லை. அவ்வாறு அளவீடு எடுக்காத வீடுகள், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் எவ்வளவு மின் கட்டணம் வந்ததோ அதை தற்போது கட்ட வேண்டும். அடுத்தமுறை விடுபட்ட 2 மாதங்கள் உட்பட 4 மாதங்களுக்கு மின் கணக்கீடு எடுக்கப்பட்டு அதில் தற்போது கட்டிய மின் கட்டணம் கழிக்கப்படும் என மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிரையர்கள் மின் கட்டண விவகாரத்தில் அலார்ட்டாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிரை மக்களே! மின்சார ரீடிங் எடுக்கவில்லை என அசால்ட்டாக இருக்க வேண்டாம்! கொஞ்சம் அலார்ட்டாக இருங்க!!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





