Saturday, September 13, 2025

கனடாவில் பயங்கரம் : முஸ்லீம் என்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை!

spot_imgspot_imgspot_imgspot_img

கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் சாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் நடந்து சென்றுள்ளனர். சாலையோரம் அந்த குடும்பத்தினர் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த கார் அந்த குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்கள் (வயது 74 மற்றும் 44), மற்றும் ஒரு ஆண் (வயது 46) மேலும் 15 வயதுடைய ஒரு சிறுமி ஆகியோர் அடக்கம். 9 வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் காரை மோதச்செய்து தாக்குதல் நடத்திய 20 வயது நிரம்பிய நபரை 6 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்த கார் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும், மதத்தின் காரணமாகவே வெறுப்புணர்வுடன் அந்த குடும்பத்தினர் மீது வேண்டுமென்றே காரை ஏற்றி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img