Sunday, February 1, 2026

அதிரையில் துவங்கிய இல்லம் தேடி கல்வித் திட்டம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நேற்று மாலை 4.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் கஸ்தூரி, திவ்யா, அஞ்சுகம், சத்தியா ஆகிய ஆசிரியர் முன்னிலையில் அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண் (2)பள்ளியின் ஆசிரியர்கள் நேற்று முதல் நாள் வகுப்புகளை துவக்கி வைத்தனர் .இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் இதில் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடல்களும் விளையாட்டுடன் கூடிய படிப்புகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

ஏற்பாடுகளை முத்தம்மாள் தெரு கிராம பஞ்சாயத்து பொறுப்பாளர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் அருமையான முறையில் அங்கு உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்கள் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

தமிழ்தாய் வாழ்த்து கூறிய மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

சிறப்பாக ஏற்பாடுகள் செய்து கொடுத்த முத்தம்மாள் தெரு கிராம நிர்வாகம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்திற்க்கும் நன்றி தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img