Thursday, March 19, 2026

அதிரையில் மக்கள் நலனுக்கு எதிரான காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைக்கவிட மாட்டோம்! முன்னாள் MLA தமீமுன் அன்சாரி திட்டவட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, அக்கட்சியின் சார்பில்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 5வது வார்டு வேட்பாளர் A.பைசல் அகமது, 17வது வார்டு வேட்பாளர் பா.ஹாஜா மர்ஜிக், 24வது வார்டு வேட்பாளர் H.ஸ்மார்ட் சாகுல் ஹமீது ஆகியோர் தமீமுன் அன்சாரியிடம் வாழ்த்து பெற்றனர்.

பின்னர் அதிரை எக்ஸ்பிரசுக்கு பேட்டியளித்த தமீமுன் அன்சாரி, மஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்ததும் ஒட்டுமொத்த அதிரைக்கும் சேவை செய்வார்கள் என்றார். இதனிடையே கடலோர பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட காஸ்டிக் சோடா தொழிற்சாலைகளால் மக்களின் ஆரோக்கியமும் சுற்றுசூழலும் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைக்கவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img