அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கீடு செய்தது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு அதிரை நகர செயலாளர் இராம.குணசேகரன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதனை தொடர்ந்து தலைமை உத்தரவை மீறி தோழமை கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பதவியை விட்டு விலகி என்னை நேரில் சந்திக்க வேண்டும். இல்லையெனில் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவீர் என பரபரப்பான அறிக்கையை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த சூழலில் தான் அங்கம் வகிக்கும் திமுக தலைமைக்கு கட்டுப்பட்டு உடனடியாக நகர துணைத் தலைவர் பதவியை இராம. குணசேகரன் ராஜினாமா செய்து அதிரை திமுக நகர அடிப்படை உறுப்பினர் பொறுப்பை தக்கவைத்து கொள்ளுவரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்…








