Sunday, February 1, 2026

குற்ற உணர்ச்சியால் நிம்மதியை இழந்த அதிரை திமுக கவுன்சிலர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக தலைமையின் சார்பில் நிறுத்தப்பட்ட தில்நவாஸ் பேகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை வரை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன். ஆனால் அன்றைய பிற்பகலில் திடீரென மறைமுக தேர்தலில் தில்நவாஸ் பேகத்தை எதிர்த்து போட்டியிட்ட அதே இராம.குணசேகரன், கூட்டணி தர்மத்தை மீறி வெற்றிபெற்றார்.

இந்நிலையில், நீ தான் துணை தலைவி என நம்பிக்கை அளித்து களத்தில் இறக்கிவிட்டு கடைசி நேரத்தில் நிராயுதபாணியாக நிறுத்தி தில்நவாஸ் பேகத்தை தோல்வி அடைய செய்ததை எண்ணி அதிரை திமுக  அதிருப்தி கவுன்சிலர்கள் தூக்கத்தை தொலைத்து நிம்மதியை இழந்து விட்டதாக தெரிகிறது.

ஆயிரமாயிரம் இடர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே, கூட்டணி தர்மத்தை மீறிய திமுக-வினரின் செயல் காரணமாக குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்பதாக அறிவித்திருக்கிறார். இதனிடையே செய்த தவறுக்கு எவ்வாறான வகையில் பரிகாரம் தேடிக்கொள்ள போகிறார்கள் அதிரை திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img