Sunday, February 1, 2026

நச் திட்டங்கள் 21 – அசத்திக்காட்டிய அதிரை சேர்மன்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர்மன்றத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்து தலைவர், துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முதல் நகர்மன்ற கூட்டம் இன்று(28-03-2022) மாலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகரமன்ற தலைவர் M.M.S. தாஹிரா அம்மாள் தலைமையில் நடைபெற்றது. 27 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த நகரமன்ற கூட்டத்தில் 21 தீர்மானங்களை ஒரு மனதாக நிறைவேற்றி உள்ளனர்

குறிப்பாக நகராட்சிக்குட்பட்ட எல்லைகளில் இருக்கும் பழுதான பாலங்களை புனரமைப்பு செய்தல், குடிநீர் ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்களை புதுப்பித்தல், நகர எல்லைகளில் குப்பைகள் சேராமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நகராட்சி பேருந்து நிலைய வணிக வளாகங்கள் 2022-2023 நிதியாண்டிற்குள் ஏலம் விடுதல், திடக்கழிவு மேலாண்மையை 27 வார்டுகளிலும் முழுமையாக செயல்படுத்த ஒப்பந்த அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேறியது.

இதுதவிர அனைத்து மின் கம்பங்களிலும் அதிகத்திறன் கொண்ட மின் விளக்குகள் பொருத்த விரைவில் நடவடிக்கை எடுக்க முடுக்கி விடப்படும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

முன்னதாக கூட்டத்தின் தொடக்கத்தில் நகரத்தலைவர் M.M.S. தாஹிரா அம்மாள், துணைத்தலைவர் இராம. குணசேகரன், ஆணையர் சசிகுமார் ஆகியோர் உறுப்பினர்களை வரவேற்றனர். சுமூகமாக நடந்து முடிந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான நடவடிக்கைகளை விரைசாக எடுக்க வேண்டும் என நகரமன்ற தலைவர் M.M.S தாஹிரா அம்மாள் கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img