Friday, March 20, 2026

அதிரையில் துண்டிக்கப்பட்ட சாலை! குழாய் கூட போட முடியாத பரிதாப நிலையில் நகராட்சி நிர்வாகம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த பருவமழை சமயத்தில் ஒருநாள் மழைக்கே அதிரையின் பிரதான தெருக்களில் நீர் தேங்கியது. அப்போது நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசர அவசரமாக வடிகாலை தூர்வாரினர். அந்த சமயத்தில் சேது ரோட்டிலிருந்து புதுத்தெரு தென்புறத்திற்கு செல்ல கூடிய சாலை துண்டிக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையை மீண்டும் சேது சாலையோடு இணைக்க உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவசர காலங்களில் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் தொடர்கிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூர்வாரிய சமயத்தில் அங்குள்ள கடைகளுக்கு செல்லுவதற்காக வடிகால் மேல் போடப்பட்ட கருங்கல் கான்கிரீட் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் கடைக்கு செல்வதற்கான பாதையை அவரவர்களே விரைவாக சரி செய்துக்கொண்டனர். ஆனால் மக்களின் வரி பணம் மூலம் இயங்கும் நகராட்சி நிர்வாகம், 15 அடிக்கு சாதாரணமாக சிமெண்ட் குழாய் போட கூட முடியாமல் திண்டாடுவது நகராட்சி நிர்வாகம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img