Sunday, February 1, 2026

தென்னிந்தியாவே திரும்பி பார்க்கும் அதிரை AFFA கால்பந்து தொடர் : ரசிகர்களின் பலத்த ஆதரவோடு மின்னொளியில் மிளிரும் மைதானம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃப்ரெண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் AFFA நடத்தும் 20 ம் ஆண்டு தென்னிந்திய அளவிளான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி நேற்று (11.07.2022) ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரை கிராணி மைதானத்தில் துவங்கியது.

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஒரு நாளைக்கு 8 போட்டிகள் வீதம் என்ற அடிப்படையில், தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்கள், ஊர்களில் இருந்து பல்வேறு தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று நாக் – அவுட் சுற்று முறையில் விளையாடி வருகின்றனர்.

அதிரை வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை கால்பந்து ரசிகர்களின் மூலம் பெற்று வரும் அதிரை AFFA அணி, தற்போது நடத்தி வரும் இந்த தென்னிந்திய அளவிளான மின்னொளி கால்பந்து தொடர் போட்டி அதிரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இளைய வீரர்களை உள்ளடக்கிய அதிரை AFFA அணியின் ஆதிக்கம் தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் அதிகரித்து அடுத்த சுற்றுக்குக்கு தகுதி பெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழலில் தனது சொந்த மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு அதிரை AFFA அணி – MFC மன்னார்குடி அணியை சந்திக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img