அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் 33/11 KV மின் பகிர்மான வட்டத்திலிருந்து பயனடையும் கிராமங்களான, புதுகோட்டை உள்ளூர்,கருங்குளம், மங்கனங்காடு, கரிசக்காடு,செளந்திர நாயகிபுரம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பின் வரும் காரணங்களால் மின் விநியோகம் இருக்காது.
அதேபோல் அதிராம்பட்டினம் நகரப்பகுதிகளில் பருவக்கால பராமரிப்பு, புதிய மின்கம்பம் நடுதல் உள்ளிட்ட பராமரிப்பு காரணங்களினால் பகுதிநேரமாக மதியம் 2மணி முதல் மாலை 5மணி வரை மின் தடை இருக்கும் என மின் வாரிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே நுகர்வோர்கள், வணிகர்கள் பொதுமக்கள் மின் தடை நேரங்களில் ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.