Saturday, September 13, 2025

அன்று கருணாநிதியால் பாராட்டப்பட்ட அதிரை கவிஞர்! இன்று உலக சாதனை புரிந்து அசத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையை கவியன்பன் கலாம் எனும் அபுல்கலாம் 40 ஆண்டுகள் கணக்காளராக அனுபவம் கொண்டவர். கவிதை யாத்தல் மரபின்பால் பற்று அதிகம் கொண்ட இவர் 1974 ஆண்டு பள்ளி படிப்பு முதல் மரபுக்கவிதை எழுதி வருகிறார். 1975ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கல்லூரி விழாவில் “கவியன்பன்” என அழைக்கப்பட்டார்..

பின்னர், கவியருவி (இலங்கைத் தடாகம் கலை இலக்கிய அமைப்பு) அதிரையின் சிறந்த கவிஞர் விருது (அதிரை நியூஸ்), கவிச்சுனை (நிலாமுற்றம் கவிக்குழுமம்) கவிச்சக்கரவர்த்தி விருது (கவியுலகப்பூஞ்சோலை), கவியரசர் விருது
(அமுதசுரபி அறக்கட்டளை) கலைக்காவலர் விருது (புதுயுகம் தொலைக்காட்சி), நட்சத்திர மரபுக்கவிஞர் விருது (அமீரக சங்கமம் தொலைக்காட்சி), தமிழப்புலவர் விருது
(அமீரகம் அஜ்மான் தனியார் நிறுவனம்), யாப்புக்கவிஞர் விருது
(துபாய்த் தமிழ் சங்கமம்) ஆகிய விருதுகளை பெற்று இருக்கிறார்.

வானலைத் தமிழ்த்தேர். துபாய் சங்கமம் தொலைக்காட்சி, துபாய்
இலண்டன் தமிழ் வானொலி பாமுகம், கவிதைநேரம், பாரதிநட்புக்காக கவிதைப்போட்டி,  அபுதாபி மதுரைத் தமிழ்ச் சங்கம் கவியரங்கம்,
அமுதசுரபி ஆண்டுவிழா, கவியுலகப் பூஞ்சோலை ஆண்டுவிழா போன்ற கவியரங்குகளையும் பங்குபெற்று தனது கவிதைகளை இயற்றி இருக்கிறார்.

இனிய திசைகள், சென்னை தினத்தந்தி, துபாய் தமிழ்நெஞ்சம், ஃப்ரான்ஸ் தென்றல், அமெரிக்கா முகநூலில் “,கவியருவி” எனும் குழுமம் நடத்தி மின்னிதழில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன.  இலங்கை தடாகம் கலை இலக்கிய கழகம்,  ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டிகளில் இவரது கவிதைக்கு பரிசுகள் கிடைத்துள்ளன.

கவியருவி எனும் குழுமம் நடத்தி வந்த இவர் அதில் மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ பாடம் நடத்திப் பல கவிஞர்களை உலகளாவிய கவிதைப் போட்டிகளுக்குப் பங்கு பற்றி வெற்றி பெற வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்து 1000 செய்யுட்கள் அடங்கிய நூல் வெளியிட உள்ள தமிழகக் கவிஞர்கள் சங்கத்தில் இவரையும் பதிவு செய்துள்ளனர். அதில் தமிழின் சிறப்பைப் பற்றிய கலாம் அவர்களின் வெண்பாவும் இடம்பெற உள்ளது. அதே போல் 500 கவிஞர்களின் பாக்களை உள்ளடக்கிய ஐந்திணை ஐநூறு எனும் தலைப்பில் ஐந்து திணைகளில் இவர் வாழும் நெய்தல் பற்றி இவர் எழுதியுள்ளது செய்யுளும் இடம் பெற உள்ளது.

தற்போது முகநூல், மின்னஞ்சல், புலனம் வழியாகவும் கவிதை இலக்கணம், ஆங்கில இலக்கணம், கணக்குப் பதிவியல் (accountancy) பாடங்களை இலவசமாக நடத்தி வரிகிறார்.

இவரது கவிதை நூலான “கலாமின் கவிதைகள்” கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கவிநானூறு எனும் தலைப்பில் வெளியான 400 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய நூலில் இவரது கவிதையும் உள்ளது. 

இந்த நிலையில் கடந்த மே 5 ஆம் தேதி INTERNATIONAL ACHIEVERS UNIVERSAL BOOK OF RECORDS APPRECIATION FOR TAMIL LITERATURE CERTIFICATE எனும் உலக சாதனையாளர்கள் பட்டியலில் தமிழ் இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை போற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு கவுரவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img